Friday, August 6, 2010

வாழ்த்துக்கள் "Airtel Super Singer"

எங்கள் வீட்டில் நாங்கள் பார்க்கும் தமிழ் channel பெரும்பாலும் விஜய் டிவி மட்டுமே. ஏனென்றால் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும் நேரம் எப்படியும் ஒன்பது மணியாக தான் இருக்கும், அந்த நேரங்களில் மற்ற channel-இல் அழுது புலம்பும் நாடகம் தான் ஓடி கொண்டிருக்கும். சமீபத்தில் "Airtel Super Singer"  சீனியர் நிகழ்ச்சி பார்த்தேன். மாற்று திறனாளி  ஒருவர் தனது கணவருடன் மூன்றாம் கட்ட குரல் தேர்வுக்காக வந்து இருந்தார். 






இருவருமே அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள். போட்டிக்கு வந்த பிற போட்டியாளர்கள் பெரும்பாலும் பாடல் வரிகளை தங்களது குறிப்பேடுகளில் இருந்து பார்த்து பாடியபோது இவர்கள் மட்டுமே என்னை மிகவும் கவர்ந்தனர். வழக்கமாக போட்டியாளர்கள் தாங்கள் தேர்ந்து எடுக்கபட்டார்கள் என்பதை பச்சை நிற விளக்கை வைத்து அறிந்துகொள்வார்கள். நான் என் மனைவி  இடம்    இவர்கள் தேர்வானார்கள் என்பதுகூட இவர்களக்கு தெரியாதே என்று சொல்லிகொண்டிருக்கும் வேளையில் மஹதி பாடியவரின் பேரை சொல்லி தாங்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு முன்னேறிவிட்டீர்கள் என்று சொன்னவுடன் எனக்கும் என் மனைவிக்கும் அளவுகடந்த ஒரு மகிழ்ச்சி. இவ்வாறு ஒரு புது முயற்சி செய்ததுற்கு "Airtel Super Singer" குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்.



No comments:

Post a Comment