Monday, September 13, 2010

நண்பரும் அவரது ஹெல்மெட்டும்...

உணவு இடைவேளையின்போது நண்பர்கள் மத்தியில் ஹெல்மெட்டும் அதன் Pros and Cons பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் அவர்கள் சொன்னது ஹெல்மெட் அணிந்தால் சென்னை தூசியில் இருந்து தப்பிக்க உதவும். அடுத்து அவர்கள் சொன்னது சென்னை வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றும். அனால் அவர்கள் யாரும் ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிந்தால் நமது உயிரை காப்பாற்றும் என்று யாரும் சொல்லவில்லை.

நடுவில் ஒரு நண்பர், மழை பெய்தால் நான் ஹெல்மெட் அணியமாட்டேன் என்றும், வெயில் அடித்தால் ஹெல்மெட் அணிவேன் என்றும் கூறினார். ஏன் என்று அனைவரும் கேட்க மழை பெய்தால் தூசி மற்றும் மண், செடிமெண்டாகி காற்றில் இருக்காது என்று தனக்கு தெரிந்த வேதியல் மற்றும் இயற்பியல் பாடங்களை எங்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

இது மட்டும் இல்லாமல் நம்ம ஊரில் பொதுவாக motorbike-இல் உள்ள rearview கண்ணாடிக்கே ஹெல்மெட் அணிந்து இருபத்து மிகவும் கவலை அளிப்பது.
மழை நேரத்தில் ஹெல்மெட்டில் வைப்பர் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.